×

கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு சீட் கொடுக்க பாஜ மறுப்பு: ஆதரவு தராவிட்டால் தமிழ்நாட்டில் தனித்து போட்டி என அமித்ஷா மிரட்டல்; முடிவு எடுக்க முடியாமல் எடப்பாடி திணறல்

சென்னை: கர்நாடகா மாநிலத்தில் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாஜ, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. தென் மாநிலங்களில் பாஜ ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகாதான். இதனால், கர்நாடகாவில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கருதிய பாஜ, தமிழர்களின் ஆதரவுக்காக அதிமுகவின் ஆதரவை கேட்டு வருகிறது. குறிப்பாக அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது. இதனால், அதிமுகவின் ஆதரவு கேட்டு அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் பேசினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பாஜவுக்கு ஆதரவு தராமல் 3 முதல் 5 சீட் வரை வேண்டும் என்று கேட்டு வந்தார். ஆனால் பாஜ மேலிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியது. ஏற்கனவே பாஜகவினருக்கே சீட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறோம். அதில் அதிமுகவுக்கு சீட் எப்படி கொடுப்பது என்று மேலிடம் திகைத்தது.

இதனால் ஆதரவு மட்டுமே வேண்டும் என்று கூறியது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, தனக்கு சீட் வேண்டும். அப்படி சீட் கிடைத்தால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம் என்று கருதினார். இந்தநிலையில் பாஜ மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 210 தொகுதிக்கு வேட்பாளரை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு 10 தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்து விட்டது. மீதம் 2 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளரை அறிவிக்க வேண்டும். இதனால் அதிமுகவுக்கு சீட் இல்லை என்று பாஜ கை விரித்து விட்டது. தற்போது, கர்நாடகாவைப் பொறுத்தவரை 15 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக உள்ளனர். இங்குமட்டும் அதிமுகவின் ஆதரவு தேவை என்று பாஜ மேலிடம் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறியுள்ளது. ஆனால் அவரோ பதில் அளிக்காமல் உள்ளார்.

மேலும் கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். இதனால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் அதிமுக வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் வருகிற 20ம் தேதிக்குள் தங்கள் முடிவை தெரிவிப்பதாக தேர்தல் ஆணையம் கூறி விட்டது. ஆனால் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அன்று தேர்தல் ஆணையம் தனது முடிவை கூறினாலும், அதிமுகவால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தில் உள்ளார்.

The post கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு சீட் கொடுக்க பாஜ மறுப்பு: ஆதரவு தராவிட்டால் தமிழ்நாட்டில் தனித்து போட்டி என அமித்ஷா மிரட்டல்; முடிவு எடுக்க முடியாமல் எடப்பாடி திணறல் appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,Karnataka assembly elections ,Amit Shah ,Tamil Nadu ,Chennai ,Karnataka ,Congress ,Secular Janata ,assembly ,Edappadi ,
× RELATED ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை பேச்சு...